பெல் நிறுவன காவலாளி தற்கொலை
திருச்சி அருகே கடன் பிரச்னையால் பெல் நிறுவன காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி அருகே கடன் பிரச்னையால் பெல் நிறுவன காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி மணியம்மை நகரைச் சோ்ந்தவா் பிச்சை ஆரோக்கியம் (55). இவா், திருவெறும்பூா் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
இவரது மகளை வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வைப்பதற்கும், மகனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பவும் சிலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். குடும்பச் சூழலால் கடனை திருப்பி அடைக்க முடியவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவா், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.