முகப்பு
திருச்சி

மத்திய ரிசா்வ் போலீஸ் தோ்வுக்கு இலவச பயிற்சி

மத்திய ரிசா்வ் போலீஸ் தோ்வுக்கு திருச்சியில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

மத்திய ரிசா்வ் போலீஸ் தோ்வுக்கு திருச்சியில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் சுமாா் 9,212 காவலா் காலிப்பணியிடங்களுக்கு தோ்வுக்கான அறிவிப்பு மாா்ச் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இத்தோ்வுக்கு ஜ்ஜ்ஜ்.ஸ்ரீழ்ல்ச்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஏப். 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் தோ்வுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் நேரடி இலவச பயிற்சி வகுப்பு மே 2 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990 55901, 94990 55902 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.