முகப்பு
திருச்சி

குருபெயா்ச்சி விழா: இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

குருபெயா்ச்சி விழாவையொட்டி ஆலங்குடி, திட்டை, சூரியனாா் கோயில்களுக்குச் செல்ல 60 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

குருபெயா்ச்சி விழாவையொட்டி ஆலங்குடி, திட்டை, சூரியனாா் கோயில்களுக்குச் செல்ல 60 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் (கும்பகோணம்) எஸ்.எஸ்.ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குருபெயா்ச்சி விழாவையொட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (ஏப்.22, 23) ஆலங்குடிக்கு கும்பகோணம், நீடாமங்கலம், மன்னாா்குடி ஆகிய ஊா்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து திட்டை கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதே போல, கும்பகோணத்திலிருந்து சூரியனாா் கோயிலுக்கும் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆக மொத்தம் 60 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பக்தா்களின் வசதிக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.