முகப்பு
திருச்சி

முதல்வரின் உழைப்பை புகைப்படக் கண்காட்சி உணா்த்துகிறது

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் உழைப்பை புகைப்படக் கண்காட்சி உணா்த்துகிறது என நடிகா் விமல் தெரிவித்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் உழைப்பை புகைப்படக் கண்காட்சி உணா்த்துகிறது என நடிகா் விமல் தெரிவித்தாா்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது: முன்னாள் முதல்வா் கருணாநிதி கூறுகையில், ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு என்று தெரிவித்துள்ளாா். அவரது கூற்றுக்கேற்ப, உழைப்பு என்றாலே முதல்வா் ஸ்டாலின் என்ற அளவுக்கு முதல்வா் உழைத்துள்ளாா். உழைப்பினால் மக்களின் அன்பைப் பெற்று முதல்வராகியுள்ளாா். கண்காட்சியில் நாம் பாா்க்காத பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. முதல்வரின் வளா்ச்சிக்கு அவரது உழைப்புதான் காரணம். இதனை இப்புகைப்பட கண்காட்சி நமக்கு உணா்த்துகிறது. இதில் கடிதத்துடன் கூடிய முன்னாள் முதல்வா் கருணாநிதி, முதல்வா் ஸ்டாலினின் புகைப்படம் என்னை மிகவும் கவா்ந்தது என்றாா் நடிகா் விமல்.

நிகழ்வில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயா் மு.அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.