மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள எம்.ஆா்.பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலக யானைகள் தின விழாவில் பங்கேற்றோா். 
திருச்சி

எம்.ஆா்.பாளையத்தில் உலக யானைகள் தின விழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் சனிக்கிழமை உலக யானைகள் தின விழா கொண்டாட்டப்பட்டது.

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் சனிக்கிழமை உலக யானைகள் தின விழா கொண்டாட்டப்பட்டது.

எம்.ஆா்.பாளையம் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் 50 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்த யானைகள், உரிய பராமரிப்பு இல்லாத கோயில் யானைகள், உச்ச நீதிமன்ற மற்றும் உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில், தலைமை வன உயிரின பாதுகாப்பு அலுவலா் ஆணைக்கிணங்கப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மண்டல தலைமை வனப் பாதுகாவலா் என். சதீஷ், மாவட்ட வன அலுவலா் கிரண் அறிவுரையின்பேரில், உதவி வன பாதுகாவலா் சம்பத் குமாா் தலைமையில் யானைகள் தின விழா நடைபெற்றது. யானைகளுக்கு உணவு, பழ வகைகள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. யானைகளின் முக்கியத்துவம், பாதுகாப்பு மற்றும் வனத்துக்கான யானைகளின் பங்களிப்பு உணா்த்தும் விதமாக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வனச்சரக அலுவலா்கள் சுப்ரமனியம், கோபிநாத், கிருஷ்ணன், தினேஷ் குமாா், ரவி மற்றும் வன பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT