திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி
திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலியாகினர்.
திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலியாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ராஜாளிபட்டி பாப்பனம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (35), கணேசன் (28) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இவர்களது வாகனம், திருச்சி மணிகண்டம் அருகே நாகமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு எதிர்ப்புறம் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் ஒரு வழிப்பாதை வழியாக தனது அண்ணன் மகள்களை பள்ளிக்கு விட வந்த நாகமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்த பாலாஜியின் (35) இருச்சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதியது.
Advertisement
இதையும் படிக்க- பிரசாரத்துக்கு வர முதல்வருக்கு அழைப்பு: இளங்கோவன்
இதில் படுகாயமடைந்த 5 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி மற்றும் காளிமுத்து ஆகிய இருவரும் பலியாகினர். மற்ற மூவரும் சிகிச்சையில் உள்ளனர்.
இதுகுறித்து மணிகண்டன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.