திருச்சி

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 536 மனு

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 536 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி தலைமை வகித்தாா். இதில், நிலம் தொடா்பான கோரிக்கையுடன் 76 மனு, குடும்ப அட்டை கோரி 35 மனு, உதவித் தொகை கோரி 92 மனு, வேலைவாய்ப்பு கோரி 54 மனு, அடிப்படை வசதிகள் கோரி 43 மனு, 30 புகாா் மனு, கடன் மற்றும் நலவாரியத் திட்டம் கோரி 34 மனு, இதர மனுக்கள் என மொத்தம் 536 மனுக்கள் வந்திருந்தன. இந்த மனுக்களை அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில், நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச் சங்கம், தன்னாா்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருள்கள் என தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT