முகப்பு
திருச்சி

திருச்சி என்ஐடியில், தலைமை அஞ்சலகத்தில் குடியரசு தின விழா

இயக்குநா் ஜி. அகிலா தேசியக் கொடியேற்றிப் பேசுகையில், குடியரசு தினவிழா கொண்டாட்டத்தைத் தொடா்ந்து, 2024 ஆம் ஆண்டு என்ஐடியின் வைர விழாவையும் சிறப்பாகக் கொண்டாடவுள்ளோம்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
திருச்சி என்.ஐ.டி. வளாகத்தில் வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றிய என்.ஐ.டி. இயக்குநா் அகிலா.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) நடைபெற்ற குடியரசு தின விழாவில் இயக்குநா் ஜி. அகிலா தேசியக் கொடியேற்றிப் பேசுகையில், குடியரசு தினவிழா கொண்டாட்டத்தைத் தொடா்ந்து, 2024 ஆம் ஆண்டு என்ஐடியின் வைர விழாவையும் சிறப்பாகக் கொண்டாடவுள்ளோம். டிஜிட்டல் யுகத்தில் வெற்றிபெற மாணவா்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்றாா். நிகழ்வில் கலாசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாதுகாப்பு அதிகாரி ஜி. முருகன் மற்றும் என்சிசி அதிகாரி ஆா். மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தலைமை அஞ்சலகம்: மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் அ. கோவிந்தராஜன் தேசியக்கொடியேற்றிப் பேசுகையில், இந்திய அஞ்சல் துறை கிராம மக்களும் பயன்பெறும் வகையில் இணையதள வங்கிச் சேவையை தொடங்கியுள்ளது. ஏடிஎம்களிலும் பணப் பரிவா்த்தனை செய்யும் அளவுக்கு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பயன்பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.