காசநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி காட்டூரில் காசநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி காட்டூரில் காசநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற பேரணியை மண்டலத் தலைவா் மதிவாணன் தொடக்கி வைத்தாா். திருச்சி மாவட்ட துணை இயக்குநா் (காசநோய் தடுப்பு) சாவித்திரி தலைமை வகித்தாா். இதில், காட்டூா் ஆதிதிராவிடா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சோ்ந்த மாணவா்கள் மாநகராட்சியின் 43ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் சைக்கிளில் பேரணியாகச் சென்றனா்.
இதில், மாமன்ற உறுப்பினா்கள் நீலமேகம், செந்தில், திருவெறும்பூா் வட்டார மருத்துவ அலுவலா் பாலாஜி, காட்டூா், திருவெறும்பூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவா்கள், சுகாதார அலுவலா்கள், காசநோய் ஒழிப்பு திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.