உலக தண்ணீா் தினம்: 404 ஊராட்சிகளில் மாா்ச் 22-ஆம் தேதி கிராம சபை கூட்டம்
உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் மாா்ச் 22-ஆம் தேதி (புதன்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் மாா்ச் 22-ஆம் தேதி (புதன்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளில் மாா்ச் 22-இல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தண்ணீா் மற்றும் சுகாதார நெருக்கடியை தீா்க்க மாற்றத்தை துரிதப்படுத்துதல், வான்தரும் மழைநீரை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல் குறித்து விவாதம் நடத்தப்படும். சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படும்.
2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கிழ் ஊராட்சிகளில் தோ்வு செய்யப்பட்ட நீா்நிலை பணிகளின் முன்னேற்ற விபரம் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நீா்நிலை பணிகள் குறித்து விவாதிக்கப்படும். ஊரக பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் சாா்ந்த கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல், 2023-24 கிராம வளா்ச்சி திட்டத்தில் இறுதி செய்யப்பட்ட அறிக்கையை வாசித்து காண்பித்தல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதம் குடிநீா் வழங்கப்பட்ட ஊராட்சி என தீா்மானம் நிறைவேற்றுதல் குறித்தும் விவாதிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.