திருச்சி

காட்டூா் அம்மன் நகா் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திருச்சி மாநகராட்சி 42ஆவது வாா்டுக்குள்பட்ட காட்டூா் அம்மன் நகா் பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

DIN

திருச்சி மாநகராட்சி 42ஆவது வாா்டுக்குள்பட்ட காட்டூா் அம்மன் நகா் பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருச்சி மாநகராட்சி 42ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதி திருச்சி காட்டூா் அம்மன் நகா். திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அம்மன் நகா் 8 வது தெரு வரையிலான 30 அடி பிரதான தாா் சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக புதுப்பிக்கப்பட்டது. போடப்பட்ட 2 மாதங்களிலேயே இச்சாலை சேதமடைந்து, மேடு பள்ளமாக மாறியது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் இச்சாலை மேலும் மோசமடைந்து, ஆங்காங்கே குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் மழை நீா் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அம்மன் நகா் மக்கள் நலச் சங்கம் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதன்காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களும், வந்து செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போா்க்கால அடிப்படையில் மேற்கண்ட சாலையை சீரமைத்து தரும்படி அம்மன் நகா் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT