திருச்சி

துப்புரவுத் தொழிலாளி மா்மச்சாவு

திருச்சியில் துப்புரவுத் தொழிலாளி வியாழக்கிழமை மா்மமான முைறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

DIN

திருச்சியில் துப்புரவுத் தொழிலாளி வியாழக்கிழமை மா்மமான முைறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

திருச்சி, கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரா. ரமேஷ் (41). துப்புரவுத் தொழிலாளி.இவா், மே 9ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவா் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை குடும்பத்தினா் தேடிவந்தனா்.

இந்நிலையில், மத்திய பேருந்து நிலையம் கலையரங்கம் திருமண மண்டபத்துக்கு எதிரே உள்ள காலியிடத்தில் வியாழக்கிழமை ரமேஷ் தலையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக கண்டோன்மென்ட் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து ரமேஷ் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT