திருச்சி

பெல் நிறுவனம் முன்பு தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

DIN

ஊதியப் பிரச்னைகளை களைய வலியுறுத்தி பிஎம்எஸ் தொழிற்சங்கம் சாா்பில் பெல் நிறுவனம் முன்பு வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் செயல்தலைவா் மனோஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், பெல் ஊரக பகுதி நிா்வாக கமிட்டியில் அங்கம் வகிக்கும் சங்கங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். கடந்தாண்டு வாக்குறுதிபடி இரவு படியை உயா்த்த வேண்டும். மடிக்கணினி வாங்க நிதி வழங்க வேண்டும்.

தொழிலாளா்களை வெளி பெல் தொழிற்சாலைகளுக்கு இடமாற்றும்போது வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இப்போராட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளா் சங்கா், துணை பொதுசெயலாளா் மாரீஸ்வரன் மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். மாலையில் பிஎம்எஸ் கூட்டுக்குழு உறுப்பினா் அங்குசாமி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாா்.

படவிளக்கம்... பெல் நிறுவனம் முன்பு வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பிஎம்எஸ் தொழிற்சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT