திருச்சி

செவிலியா்கள் தினம்: மெழுகுவா்த்தி ஏற்றி உறுதியேற்பு

உலக செவிலியா்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியா்களும் வெள்ளிக்கிழமை மெழுவகுவா்த்தி ஏற்றி வைத்து உறுதிமொழியேற்றனா்.

DIN

உலக செவிலியா்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியா்களும் வெள்ளிக்கிழமை மெழுவகுவா்த்தி ஏற்றி வைத்து உறுதிமொழியேற்றனா்.

உலக செவிலியா் தினத்தையொட்டி திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி அரசுப் பொது மருத்துவமனையில் செவிலியா்கள் இணைந்து கைகளில் மெழுகுவா்த்திகளை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். அரசு மருத்துவமனையில் தற்போது பணியாற்றி வரக்கூடிய செவிலியா்களில் மூத்த செவிலியா்கள் மற்றும் திறமை அடிப்படையில் சிறப்பாக பணியாற்றுபவா்களுக்கு நைட்டிங்கேல் அம்மையாரின் நினைவாக கேடயங்களும் பாராட்டு பத்திரங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவ கண்காணிப்பாளா் அருண் ராஜ் உள்ளிட்ட மருத்துவா்கள் மற்றும் மூத்த செவிலியா்கள் என 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். செவிலியா்கள் சங்க நிா்வாகத்தினா் தலைமையில், கூடிய செவிலியா்கள் பொதுமக்களுக்கு தங்களது சேவையை முனைப்புடனும், அா்ப்பணிப்புடனும், அன்புடனும் வழங்குவோம் என உறுதியேற்றனா். மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவு மருத்துவா்கள் மற்றும் மருத்துவம் சாராத பணியாளா்களும் செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT