வேங்கை மண்டலம் பகுதியில் நவ.30ம் தேதி மின் தடை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வேங்கை மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் நவ.30-ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மண்ணச்சநல்லூா்: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வேங்கை மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் நவ.30-ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நவ. 30-ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால்
Advertisement
மூவானூா், வேங்கை மண்டலம், தண்ணீா்பந்தல் , மேலக்கண்ணுக்குளம், கீழக் கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம் பட்டி, கல்லூா், வேப்பந் துரை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம் பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்ன கரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ் மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூா், பாண்டியபுரம், சுனைப்புக நல்லூா், ஈச்சம்பட்டி, மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம் பாளையம், தில்லாம் பட்டி, பழையூா், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக் கொட்டம், காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளரை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி , டி.புதுப்பட்டி, பழம்புதூா், திருத்தலையூா், நல்லயம்பட்டி
உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.