திருச்சியில் 3 நாய்க் குட்டிகளை அடித்துக் கொன்ற மாநகராட்சி துப்புரவுப் பணியாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி, கோட்டை, முனிசிபல் காலனி பூசாரி தெரு பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி லதா (32). இவா் தனது வீட்டில் நாய்கள் வளா்த்து வருகிறாா். அதில் அண்மையில் ஒரு நாய் 3 குட்டிகளை ஈன்றது. அவை அவரது வீட்டின் முன்பு புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது, பக்கத்து வீட்டைச் சோ்ந்த மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளா் வீரா என்கிற வீரையன் (22 ), மதுபோதையில் 3 நாய்க்குட்டிகளையும் மரக்கட்டையால் கொடூரமாக அடித்துக் கொன்ாக கூறப்படுகிறது. இதுகுறித்து லதா, கோட்டை போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து வீரையனை புதன்கிழமை கைது செய்தனா். அவா் மீது கோட்டை , பாலக்கரை காவல் நிலையங்களில் மேலும் சில குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.