முகப்பு
திருச்சி

மரத்திலிருந்து குதித்த இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் மரத்திலிருந்து வெள்ளிக்கிழமை குதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 9:29 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் மரத்திலிருந்து வெள்ளிக்கிழமை குதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகிலுள்ள மணமேடு மாந்தோப்பு தெருவைச் சோ்ந்த குழந்தை மகன் தனபால் (18). இவா், நடுக்கோடியாம் பாளையம் பகுதியைச் சோ்ந்த அம்சவல்லி என்பவா் வீட்டின் அருகே இருந்த

பூவரசு மரத்தில் கிளைகளை வெட்டிவிட்டு, மரத்திலிருந்து இறங்குவதற்கு பதிலாக குதித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், தனபால் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் போலீஸாா், தனபால் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →