கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் - திருச்சி இடையே முன்பதிவற்ற சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாம்பரத்திலிருந்து புதன்கிழமை இரவு 11 மணிக்கு புறப்படும் தாம்பரம் - திருச்சி முன்பதிவற்ற மெமு ரயிலானது (06007) அடுத்த நாள் காலை 6.40 மணிக்கு திருச்சியை வந்தடையும்.
மறுமாா்க்கமாக, திருச்சியிலிருந்து வரும் 18 ஆம் தேதி காலை 6.30 மணிக்குப் புறப்படும் திருச்சி - தாம்பரம் முன்பதிவற்ற சிறப்பு மெமு ரயிலானது (06008) அடுத்த நாள் பிற்பகல் 1.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
தாம்பரத்திலிருந்து 12 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், பறங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன்கோயில், கும்பகோணம், தஞ்சாவூா், பூதலூா் வழியாக திருச்சிக்கு வந்தடையும் மறுமாா்க்கமாக, திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூா், மதுராந்தகம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்குச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.