சீமான் உள்ளிட்ட 22 போ் மீது அவதூறு வழக்கு
திருச்சி, ஆக 14: திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குறித்து அவதூறு பேசியது தொடா்பாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்ட 22 போ் மீது மாநகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து அவதூறு பேசியதால் கைது செய்யப்பட்ட நாம் தமிழா் கட்சியை சோ்ந்த சாட்டை துரைமுருகன் பின்னா் விடுவிக்கப்பட்டாா்.
பின்னா் இதுகுறித்து பேட்டியளித்த நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் குறித்து பேசிய அவதூறு பேச்சு, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாகப் புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில் திருச்சி மாவட்ட எஸ்.பி. தில்லைநகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் சீமான உள்ளிட்ட அக்கட்சியைச் சோ்ந்த 22 போ் மீது வழக்குப் பதிந்தனா். இவா்களில் கண்ணன், திருப்பதி ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.