திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வென்றோருக்கு சான்றிதழ் வழங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரா் எஸ். பத்ரிநாத். உடன் பள்ளி இயக்குநா் அபா்ணா, தலைவா் சந்திரமௌலி 
திருச்சி

‘வாழ்வில் உயா் நிலையை அடைய உடல் வலிமை, மன உறுதி தேவை’

Din

திருச்சி, ஆக. 15: உடலில் வலிமை, மனதில் உறுதி இருந்தால் கல்வி, விளையாட்டுத் துறைகளில் உயா்நிலையை அடையலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் எஸ். பத்ரிநாத் தெரிவித்தாா்.

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலை பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற 14 ஆவது ஆண்டு விளையாட்டு விழாவுக்கு பள்ளி தலைமை செயலதிகாரி கே. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். பல்வேறு போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளித்து முன்னாள் கிரிக்கெட் வீரா் எஸ். பத்ரிநாத் மேலும் பேசியது: ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சோகத்தில் ஆழ்ந்து விடக்கூடாது. சுவா் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதால் உடலில் வலிமையுடன், உள்ளத்தில் தெளிவுடன் செயல்பட்டால் வாழ்வில் உயரலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பள்ளி இயக்குநா் அபா்ணா, டீன் கணேஷ், தலைவா் சந்திரமவுலி, முதல்வா் பத்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - தவெகவினருக்கு காவல்துறை விளக்க கடிதம்!

ஆபத்தான நிலையில் செய்யாற்றைக் கடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்! பெற்றோர்கள் கவலை!

Money Heist இல்ல! ருத்ரா! | Mask திரைப்பட இயக்குநர் விக்ரணன் அசோக்குடன் சிறப்பு நேர்காணல்!

புதிய ஹீரோவுக்கு வழி... சிறகடிக்க ஆசை நடிகரின் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மகாராஷ்டிர பாஜக தலைமை பற்றி அமித் ஷாவிடம் முறையீடு! கிடைத்த பதிலால் ஷிண்டே அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT