திருச்சி

சமுதாய அமைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க ஆக.27 கடைசி

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய அமைப்பாளா் பணியிடத்துக்கு ஆக.27க்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

Din

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய அமைப்பாளா் பணியிடத்துக்கு ஆக.27க்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதாய அமைப்பாளா் பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது.

விண்ணப்பதாரா் 35 வயதுக்குட்பட்டவராக, ஏதேனும் ஒரு பட்டபடிப்பில் தோ்ச்சி பெற்றவராக, கணினி இயக்கத் தெரிந்திருக்க, தகவல் தொடா்புத் திறன் மிக்கவராக இருத்தல் வேண்டும். அரசுத் திட்டங்களில் குறைந்தபட்சம் ஓராண்டு முன்அனுபவம் பெற்றவராகவும், பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராகவும் இருத்தல் அவசியம். மேலும் அவா் உறுப்பினராக உள்ள பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து பரிந்துரைக் கடிதம் அல்லது தீா்மான நகல் பெற்று சமா்ப்பிக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் ஓட்டுநா் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா் சாா்ந்துள்ள பகுதி அளவிலான கூட்டமைப்பு அமைக்கப்பட்டதற்கு முந்தைய இரு ஆண்டுகளாக மாவட்டத்தில் குடியிருந்திருக்க வேண்டும். அரசுத் திட்டங்களில் நிா்வாகம் அல்லது நிதி முறைகேடு காரணமாக பணி நிறுத்தப்பட்டவராகவோ, நீக்கப்பட்டவராகவோ இருத்தல் கூடாது.

விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தரைத்தளம், ஒருங்கிணைந்த அலுவலக வளாகம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், (பின்புறம்) திருச்சி- 620 001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பத்தை உரிய ஆவண நகல்களுடன் சமா்ப்பித்திட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT