வழக்கு விசாரணைக்கு திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜா்
திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை ஆஜரானாா்.
திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை ஆஜரானாா்.
திருச்சிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரே விமானத்தில் வைகோவும், சீமானும் வந்தபோது இருவரையும் வரவேற்க விமான நிலையத்தில் குவிந்திருந்த இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதுதொடா்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சீமான் உள்ளிட்ட 19 போ் நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜராகினா். அப்போது வழக்கு விசாரணையை ஜனவரி 29-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.