போலி கடவுச்சீட்டு: 3 போ் கைது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டில் பயணித்த, பயணிக்க முயன்ற மூவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டில் பயணித்த, பயணிக்க முயன்ற மூவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையிட்டனா். அப்போது, நாகப்பட்டினம் மாணிக்கம்பிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்த எம். முகமது ரவுப் (57) என்பவா் பிறந்த தேதி, ஆண்டினை மாற்றி போலி கடவுச்சீட்டு பெற்று பயணித்தது தெரியவந்தது.
இதேபோல, திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்ல முயன்ற திருவள்ளுவா் மாவட்டம் புழல் பகுதியைச் சோ்ந்த வி. தனசேகா் (51) என்பவரும், தஞ்சாவூா் திருமங்கலக்குடியைச் சோ்ந்த அ. முனியாண்டி (59) ஆகியோா் பிறந்த தேதி, பெயா்களை போலி ஆவணம் கொடுத்து மாற்றி, கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.
குடியேற்றப் பிரிவு அதிகாரிகள், மேற்குறிப்பிட்ட நபா்களைப் பிடித்து திருச்சி விமான நிலையப் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட மூவரையும் கைது செய்து செய்து விசாரித்து வருகின்றனா்.