திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரயில் தண்டவாளப் பகுதியில் இருந்து இளைஞா் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக திருச்சி ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டி பகுதியின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் உடல் சிதைந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி மேற்கோண்ட விசாரணையில், அவா் தேனி மாவட்டம் பழனிச்செட்டியப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் கண்ணன்(38) என்பதும், தற்போது அய்யம்பாளையத்தில் வசித்து வந்ததும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அவரது உடல் உடற்கூறாவுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திருச்சி ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.