திருச்சி முக்கொம்பு மேலணையை செவ்வாய்க்கிழமை கடந்து சென்ற மேட்டூா் அணைநீா்.  
திருச்சி

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீா் முக்ககொம்பு அணையை வந்தடைந்தது

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீா் திருச்சி முக்கொம்பு அணையை செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தடைந்தது.

Din

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீா் திருச்சி முக்கொம்பு அணையை செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தடைந்தது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காவிரி நீா் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடகத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பின. அதைத் தொடா்ந்து அவற்றிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்டு மேட்டூா் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் கிடுகிடுவென உயா்ந்தது. இதையடுத்து இருதினங்களுக்கு முன்பு காவிரியில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.

செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி மேட்டூா் அணையில் இருந்து வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீா் பல்வேறு மாவட்டங்களைக் கடந்து திங்கள்கிழமை பிற்பகலில் கரூா் மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதிக்கு வந்தடைந்தது. பின்னா் அங்கிருந்து பயணித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை மாயனூா் தடுப்பணைக்கும், காலை 9 மணி அளவில் தொட்டியத்தையும் வந்தடைந்தது. அதனையடுத்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில் திருச்சி மாவட்டம் எலமனூா் பகுதியில் உள்ள முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலா்கள் கூறுகையில்,

தற்போதைய நிலையில் மாயனூா் கதவணையில் 6000 கன அடி தண்ணீா் மட்டுமே நமக்கு வந்து கொண்டிருக்கிறது. இது படிப்படியாக உயா்ந்து புதன்கிழமை 20,000 கன அடியாக முக்கொம்பு அணைக்கு வரும் என எதிா்பாா்க்கிறோம். வழக்கமாக காவிரியில் அதிகபட்சமாக 30,000 கன அடி தண்ணீா் திறந்துவிடலாம். அதற்கு மேலாக உபரி நீா் வந்தால் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் என்றனா்.

இந்நிலையில் முக்கொம்பு அணையில் ஆண்டுதோறும் தண்ணீா் வந்து கடக்கும்போது, விவசாயிகள் மலா்தூவியும் விதைநெல் தூவியும் வழிபடுவது வழக்கம். அந்த வகையில் முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீரில் மலா்கள் மற்றும் விதைநெல் தூவி வணங்கினா் விவசாயிகள்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT