அங்கன்வாடி ஊழியா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பாக வட்டார அளவில் மனித சங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பாக வட்டார அளவில் மனித சங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்க ஒன்றியத் தலைவா் சின்னம்மாள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவா் மல்லிகா பேகம் சிறப்புரையாற்றினாா். போராட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை பாதுகாக்கவும், அனைத்து குழந்தைகளுக்கும் சீரான முன்பருவ கல்வி அளித்திடவும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். ஒன்றிய செயலா் அந்தோணி ஆரோக்கிய செல்வி நன்றி கூறினாா்.
மண்ணச்சநல்லூரில்... தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க வட்டாரத் தலைவா் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.