முகப்பு
திருச்சி

கந்தா்வகோட்டையில் வருவாய்த் துறையினா் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 9:56 PM
கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.
பகிர்:

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு வட்டாட்சியா் எஸ். விஜயலெட்சுமி தலைமை வகித்தாா்.

இதில், பழைய ஓய்வூதியம் , ஈட்டிய விடுப்புக்கு பண பலன், தகுதிகாண் பருவம் முடிந்தோருக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில், துணை வட்டாட்சியா் சிவாஜிதாசன், செல்வசந்தியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.