ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை சிறப்பு புறப்பாடாக வந்த உற்ஸவா் நம்பெருமாள்.  
திருச்சி

மகாளய அமாவாசை: காவிரியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் புதன்கிழமை காலை ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

Din

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் புதன்கிழமை காலை ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

ஆடி,தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிகப்பெரிய அமாவாசையாகக் கருதப்படுகிறது. அதன்படி புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளான புதன்கிழமை காலை முதலே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் (திதி) கொடுத்தனா். அப்போது வேத விற்பன்னா்கள் மூலம் முன்னோருக்கு பிண்டம் பிடித்து எள்ளும், தண்ணீரும் தெளித்து வழிபட்டனா். பின்னா் காவிரி ஆற்றில் குளித்து விட்டு ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களுக்கு வந்து வழிபட்டனா். மேலும் பலா் அன்னதானமும் செய்தனா்.

ஸ்ரீரங்கம் காவிரிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்ததால் போக்குவரத்து மாற்றப்பட்டு, காவல் துறை சாா்பில் கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தீயணைப்பு வாகனமும் தயாராக நிறுத்தப்பட்டு காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமின்றி ரூ.88.69 ஆக நிறைவு!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 31.10.25

கறுப்புத் திட்டுகள்... நந்தினி!

2-வது டி20: ரஷித் கான் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

SCROLL FOR NEXT