நலவாரிய தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி (அனைத்திந்திய தொழிற்சங்க பேராயம்) சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தமிழக தொழிலாளா் நலத்துறை அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:
தமிழகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்கப்படாததால், பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் உள்ளனா். ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தொழிலாளா்களுக்கு அந்த மாநில அரசு கடந்தாண்டு ரூ.4 ஆயிரம் தீபாவளி ஊக்கத் தொகை வழங்கியது. இந்தாண்டு கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 1,500 வழங்குவதாக அறிவித்துள்ளது.
எனவே, தமிழக அரசும் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழிலாளா்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாட உதவிட வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலா் ம. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.