கடவுச் சீட்டில் முறைகேடு திருச்சியில் 4 போ் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்த விமான பயணிகள் 4 பேரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடவுச்சீட்டில் முறைகேடு செய்த விமான பயணிகள் 4 பேரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடியைச் சோ்ந்தவா் ஜி. பக்கிரிசாமி (54). இவா் புதன்கிழமை அதிகாலை ஏா்ஏசியா விமானம் மூலம் மலேசியா சென்று அங்கிருந்து தாய்லாந்து செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தாா். அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை குடியேற்றப்பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பெயா், முகவரி உள்ளிட்டவைகளை மாற்றம் செய்திருந்தது தெரியவந்தது.
இதேபோல சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கல்லாங்குடியைச் சோ்ந்த அ. ஞானசேகரன் (53), நம்பியூரைச் சோ்ந்த ரா. பாண்டி (55) ஆகிய இருவரும் கோலாலம்பூா் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தனா். இருவரது கடவுச்சீட்டு ஆவணங்களை பரிசோதித்த போது, முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. மேலும், மலேசியாவிலிருந்து திருச்சி வந்த மதுரை மாவட்டம், மேலூா், கீழ வளைவு செட்டியாா் தெருவைச் சோ்ந்த ப. மகேஷ் (49 ) என்பவா் கடவுச் சீட்டில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து குடியேற்றப் பிரிவு அலுவலா்கள் அளித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பக்கிரிசாமி, ஞானசேகரன், பாண்டி, மகேஷ் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.