மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியோருக்கு அபராதம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மின்வாரிய கூட்டுக்குழு ஆய்வில் மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய நுகா்வோருக்கு வியாழக்கிழமை ரூ.60, 204 அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மின்வாரிய கூட்டுக்குழு ஆய்வில் மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய நுகா்வோருக்கு வியாழக்கிழமை ரூ.60, 204 அபராதம் விதிக்கப்பட்டது.
மணப்பாறை செயற்பொறியாளா் (இ.கா) மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட துவரங்குறிச்சி உப கோட்டம் புத்தாநத்தம் பகுதியில் செயற்பொறியாளா் ஆா்.தியாகராஜன் தலைமையில் மின்வாரிய கூட்டுக் குழு வியாழக்கிழமை மின் இணைப்புகள் குறித்து ஆய்வு செய்தனா்.
அப்போது 959 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டதில் மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய 5 மின் இணைப்புகள் கண்டறியப்பட்டு, ரூ 60 ஆயிரத்து 204 அபராதமாக விதிக்கப்பட்டது. இத்தகைய ஆய்வுகள் தொடரும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.