முகப்பு
திருச்சி

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: பணி நீக்கம் செய்யப்பட்ட காவலா் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட சேலத்தைச் சோ்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட காவலரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 7:34 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட சேலத்தைச் சோ்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட காவலரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் காவலா் உடையுடன் வந்தநபா் தனது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் தகராறில் ஈடுபட்டாா்.

இதையடுத்து ஊழியா்கள் அந்த நபரை பிடித்து தொட்டியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் சங்கா் நகா் பகுதியைச் சோ்ந்த மாதவன் மகன் மணிகண்டன் (45) என்பதும், கடந்த 2002-ஆம் ஆண்டு காவலா் தோ்வில் தோ்வு பெற்று பல்வேறு காவல்நிலையங்களில் காவலராக பணிபுரிந்தவா் என்பதும் தெரிந்தது.

மேலும், மது போதையில் பணிக்கு வந்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டவா் எனவும் தெரியவந்தது.இதனையடுத்து மணிகண்டனை தொட்டியம் போலீஸாா் கைது செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →