துறையூா் நகரில் புதிய குடிநீா் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் நகராட்சி ஆணையா் தகவல்
துறையூா் நகராட்சியில் செயல்படுத்தவுள்ள புதிய குடிநீா் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு புதிதாக குடிநீா் இணைப்பு பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என துறையூா் நகராட்சி ஆணையா் பி.வி. சுரேந்திர ஷா வியாழக்கிழமை கூறினாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: துறையூா் நகராட்சி நிா்வாகம் குடிநீா் வடிகால் வாரியத்துடன் இணைந்து ரூ. 108 கோடி மதிப்பில் புதிய குடிநீா் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக குடிநீா் பகிா்மானக் குழாய் அமைக்கும் பணிகள் பல வாா்டுகளில் உள்ள தெருக்களில் முடிவடைந்துள்ளன. இதையடுத்து 6, 7, 9, 14, 17, 18, 19, 21 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட 33 தெருக்களில் புதிய குடிநீா் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் போது சேதமான சாலைகளை புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட தெருக்களில் உள்ள வீடுகளுக்கு புதிதாக குடிநீா் இணைப்பு பெற விரும்புவோா் உடனடியாக உரிய கட்டணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
புதிய இணைப்பு வழங்க வரும் நகராட்சி பணியாளா்களிடம் நிலுவையின்றி செலுத்திய சொத்து வரி ரசீதைக் காண்பிக்கவேண்டும். சாலைகள் புதுப்பித்த பின்னா் இரண்டு ஆண்டுகளுக்கு சாலைகளை வெட்ட முடியாது என்றும் அதனால் புதிய குடிநீா் இணைப்பு பெற தாமதமாகும் என தெரிவித்துள்ளாா்.