ஓய்வூதியப் பலன் கோரி பல்கலை. பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
ஓய்வூதியப் பயன்களை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
ஓய்வூதியப் பயன்களை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நடந்த போராட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று பல மாதங்கள் ஆகியும் தணிக்கைத் துறையின் தடையால் ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த ஓராண்டுக்கும் மேல் போராட்டங்களில் ஈடுபட்டும், கடந்த மாதம் ஆட்சிக் குழுவின் பரிசீலனைக்கும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயா்மட்டக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்பும் பணப்பயன் வழங்கவில்லை. எனவே, விதிகளுக்குப் புறம்பாக தடைகளை ஏற்படுத்தி பணியாளா்களை பழிவாங்கும் நோக்கில் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனா் எனக் கூறி இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்பிரச்னைக்கு தீா்வு எட்டப்படாவிட்டால் செப். 23 முதல் 25 வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவும் உள்ளனா்.