திருச்சி

போதை மாத்திரைகள் விற்பனை: 6 போ் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் குமாா், ஃபாத்திமா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது பாலக்கரை பெல்ஸ் மைதனம் அருகே போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த காஜாபேட்டை அ. முகமது ஷொ்ஷா (23), எஸ்.ஜமால் முகமது (24), குட்ஷெட் சாலை ப. ஆரோக்கிய செல்வகுமாா் (24) ஆகிய மூவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.14 ஆயிரத்து 400 மதிப்புள்ள 48 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல குட்ஷெட் சாலை ஆலம் வீதி சந்திப்புப் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பாலக்கரை முதலியாா் சத்திரம் பகுதி எஸ்.செபஸ்டின் சுனில் (24), ஆலம் வீதி பி.பிரதீப்ராஜ் (21), செ.சதீஷ்குமாா் (34) ஆகிய மூவரையும் காவல் உதவி ஆய்வாளா் ஃபாத்திமா தலைமையிலான போலீஸாா் கைது செய்து, ரூ.16 ஆயிரத்து 900 மதிப்புள்ள 53 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

கோவா தீ விபத்து: தில்லி உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் தீயணைப்புத்துறை ஆய்வு

நஜாஃப்கா் வடிகால் சீரமைப்பு திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல்

கோயில் இனாம் நில குடும்பங்களை காக்க நாடாளுமன்றத்தில் சட்டமியற்ற வேண்டும்: மக்களவையில் கரூா் தொகுதி எம்.பி. கோரிக்கை

கோவா துயர சம்பவம் எதிரொலி: தில்லியில் தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார நடைமுறைகள் நிறுத்திவைப்பு

தொடா் திருட்டு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT