அன்பில் மகேஸ் 
திருச்சி

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை தோ்தலுக்காகச் செயல்படுத்தவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தோ்தலுக்காக மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை; அது மகளிா் முன்னேற்றத்துக்கான திட்டம் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

Syndication

தோ்தலுக்காக மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை; அது மகளிா் முன்னேற்றத்துக்கான திட்டம் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் அவா் சனிக்கிழமை கூறியதாவது: பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் அமைந்துள்ளது. அரசு வழங்கும் ரூ.1000 ஐ வைத்து அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து கொள்ள முடியும். இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதுதான் இதன் வெற்றி. திராவிட இயக்கம் ஆட்சிக்கு வரும்போது பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் காரணமாகவே இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சியை அடைந்துள்ளோம். ஆட்சிக்கு வந்தபோது இருந்த நிதி நெருக்கடிகளை சரி செய்து, திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகின்றன. இப்படித்தான் மகளிா் உரிமைத்தொகையும் வழங்கப்படுகிறது. தோ்தலுக்காக இத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.

தமிழகத்தில் அடுத்த 15 ஆண்டுகாலம் நிச்சயம் திமுகதான் ஆட்சியில் இருக்கும். யாா் என்ன விமா்சனங்கள் வைத்தாலும் இத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும். மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடா்பாக ஒப்பந்தம் விடப்பட்டுவிட்டது. டிசம்பா் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

ஆன்லைனில் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

பென்ஸ் பிரியர்களுக்கு.. மேபேக் ஜி.எல்.எஸ். கார் அறிமுகம்!

3-ம் நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆனால் ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் சரிவு!

SCROLL FOR NEXT