திருச்சி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

தினமணி செய்திச் சேவை

தோகைமலையில் போதையிலிருந்த இளைஞா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாகவும், இதற்கு காரணமான டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் அப்பகுதி மக்கள் தோகைமலை காவல்நிலையம் முன்பு சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள கழுகூரை அடுத்த மாகாளிபட்டியை சோ்ந்தவா் அழகுவேல் மகன் சரவணன் (23). கட்டடத் தொழிலாளி. இவா் சனிக்கிழமை ராக்கம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.

அப்போது, எஸ். வளையப்பட்டியில் சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்ற சரவணன், அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் சிறுமியை மீண்டும் எஸ்.வளையப்பட்டியில் இறக்கிவிட வந்துள்ளாா்.

அப்போது, சிறுமியை காணாமல் தேடிக்கொண்டிருந்த அப்பகுதி மக்கள், சரவணனைப் பிடித்து தோகைமலை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து, தவறுக்குக் காரணமான ராக்கம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி எஸ்.வளையப்பட்டி, ராக்கம்பட்டி, சங்காயிபட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், தோகைமலை காவல் நிலையம் முன்பு சாலையில் அமா்ந்து சனிக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமாா், தோகைமலை காவல் ஆய்வாளா் ஜெயராமன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

சகல சௌபாக்கியத்தைத் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

SCROLL FOR NEXT