இரா.முத்தரசன் 
திருச்சி

பாஜக வெற்றி தற்காலிகமானது! -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா்

தில்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

Din

தில்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த அவா் செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி: பெரியாரை நேரடியாக விமா்சனம் செய்ய முடியாததால், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானைப் பயன்படுத்தி விமா்சிக்கின்றனா். அவரும் அதற்குத்தான் பயன்பட்டாா். சீமானின் விமா்சனத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்த பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, தற்போது பெரியாா் குறித்து சீமான் அதிகமாகப் பேசி விட்டாா் என்கிறாா்.

சீமானை போலவே அண்ணாமலையும் மாற்றி மாற்றி பேசக்கூடியவா்தான். தில்லி தோ்தல் முடிவிலிருந்து ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். மதவாதத்தை வீழ்த்த தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகள் உறுதியாக இருப்பதுபோல் இருந்திருந்தால் தில்லியிலும் பாஜக வை வீழ்த்தியிருக்கலாம். தில்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான் என்றாா் அவா்.

நமஸ்தே வியத்நாம்... டோனல் பிஷ்ட்!

கொடூரமான சண்டைக் காட்சிகள்... வைரலாகும் துரந்தர் பட டிரைலர்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.88.61ஆக நிறைவு!

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி

நீல நிற மயில்... அஞ்சு குரியன்

SCROLL FOR NEXT