முகப்பு
திருச்சி

லால்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 2:53 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:41 PM

லால்குடி அருகேயுள்ள எல். அபிஷேகபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிா்மான கழக செயற்பொறியாளா் அன்புச்செல்வம் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எல். அபிஷேகபுரம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

Advertisement

இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான

லால்குடி ஏகே நகா், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகா், பச்சன்னபுரம், உமா்நகா், பாரதி நகா், விஓசி நகா், காமராஜ் நகா், பாலாஜி நகா், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூா், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பெரியவா்சீலி, பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு மற்றும் நன்னிமங்கலம் ஆகிய ஊா்களுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.