திருச்சி

சாலை தடுப்பில் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Din

திருச்சி: திருச்சியில் சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி துரைசாமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் (27). தச்சா். இவா் கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா். பஞ்சப்பூா் ரவுண்டானா பகுதியில் சென்றபோது அவரது வாகனம் கட்டுப் பாட்டை இழந்து அங்குள்ள சாலை தடுப்பு கம்பியில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சை முடிந்து சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினாா்.

மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சனிக்கிழமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால் சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜோசப்புக்கு மனைவி மற்றும் மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளனா். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

SCROLL FOR NEXT