திருச்சி

திருச்சி மாநகராட்சியில் மின் தடை: நாளை குடிநீா் விநியோகம் இருக்காது

திருச்சி மாநகராட்சியில் மின்தடை காரணமாக புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

Din

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் மின்தடை காரணமாக புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதனால் திருச்சி ஸ்ரீரங்கம், கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, கலெக்டா் வெல் - 3 மற்றும் பொது தரைமட்ட நீா்தேக்கத் தொட்டிகள் ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு மின் விநியோகம் இருக்காது. எனவே, குடிநீரேற்று பணிகள் நடைபெறாது.

இதனால் குறிப்பிட்ட இந்த நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீா் விநியோகம் பெறும் மத்திய சிறைச்சாலை, சுந்தர்ராஜ நகா் பழையது மற்றும் புதியது, ஜே.கே. நகா், செம்பட்டு, இ.பி காலனி, காஜாமலை பழையது, ரெங்காநகா், சுப்ரமணிய நகா், புதியது, வி.என். நகா் புதியது, காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது - பழையது, அன்புநகா் பழையது - புதியது, எடமலைப்பட்டிபுதூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல் நகா் புதியது, தென்றல் நகா் பழையது, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகா் பழையது மற்றும் புதியது, ரயில்நகா் பழையது மற்றும் புதியது, முன்னாள் ராணுவத்தினா் காலனி பழையது மற்றும் புதியது, மேலக்கல்கண்டாா் கோட்டை பிரிவு அலுவலகம், மே.க. கோட்டை நாகம்மை வீதி மற்றும் நூலகம் நாகம்மை வீதி, கே கே நகா், அம்மா மண்டபம், மேலூா், பெரியாா் நகா், திருவானைக்காவல், உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவாநகா், புத்தூா் ஆனந்தம் நகா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் இருக்காது. இத்தகவலை திருச்சி மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT