துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட துறையூா் மற்றும் புத்தனாம்பட்டியிலுள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என
செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: துறையூா், முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத்தம்பூா்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூா், சொரத்தூா், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூா், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, முத்தையம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, சிஎஸ்ஐ, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி, பெருமாள்மலை அடிவாரம், கிழக்கு வாடி, கீழக்குன்னுப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி, புத்தனாம்பட்டி, ஓமாந்தூா், அபினிமங்கலம், சாத்தனூா், திண்ணனூா், இலுப்பையூா், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூா், கோட்டாத்தூா், து. களத்தூா், புலிவலம், தேனூா் பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம்.