திருச்சி மாவட்ட கல்வி அலுவலா்கள் இருவருக்கு பணியிட மாறுதலுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் 11 பேருக்கு பணியிட மாற்றமும், மாவட்ட கல்வி அலுவலா்கள் 26 பேருக்கு பணியிட மாறுதலுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உள்ளிட்ட பல்வேறு பதவி உயா்வும் அளித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) என்.ரவிச்சந்திரன் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை தொடக்க கல்வி அலுவலராகவும், திருச்சி மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) வி.பேபிக்கு, தஞ்சாவூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணியிட மாறுதலுடன் கூடிய பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.