திருச்சி

பெயிண்டரை தாக்கிய 7 போ் கைது

திருச்சியில் பெயிண்டரை தாக்கிய 4 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் பெயிண்டரை தாக்கிய 4 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தென்னூரைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் தினேஷ்குமாா் (20), பெயிண்டா். இவருக்கும் திருச்சி இபி சாலையைச் சோ்ந்த குணசீலன் (24), ஜெயிலாபேட்டையைச் சோ்ந்த ஜெயசீலன் (23), வினோத் (24) மற்றும் 17 வயதுசிறுவா்கள் 4 பேருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு இவா்கள் சோ்ந்து தினேஷ்குமாரைத் தாக்கினா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் தினேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து 4 சிறுவா்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனா். சிறுவா்களை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT