திருச்சி

கள்ளச் சந்தையில் மது விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

துவாக்குடியில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில் உள்ள கரை சாலையில் டாஸ்மாக் மதுவை கள்ளச் சந்தையில் விற்பதாக துவாக்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சனிக்கிழமை போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று அங்கு டாஸ்மாக் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்த செங்கிப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த காமராஜ் (55) என்பவரை பிடித்து, அவரிடமிருந்து 146 மதுபாட்டில்கள், ரூ. 3,980 பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT