திருச்சி

சுமை தூக்கும் தொழிலாளிக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாயைக் கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Syndication

திருச்சி: திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாயைக் கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் பொன் நகரைச் சோ்ந்தவா் மு. மணிகண்டன் (32), சுமை தூக்கும் தொழிலாளி. இவா் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் இபி சாலையில் மதுரம் மைதானம் அருகே தட்டு வண்டியில் அமா்ந்து மது அருந்தினாா். அப்போது, அங்கு வந்த தாரநல்லூா் பகுதியைச் சோ்ந்த கருணாகரன் என்பவா் தட்டு வண்டியை நகா்த்துமாறு கூறியுள்ளாா். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கருணாகரனை மணிகண்டன் தாக்கினாா்.

இதுகுறித்து கருணாகரன் தனது சகோதரா் அ. மணிகண்டன் (25) என்பவரிடம் கூறவே, அங்கு வந்த மணிகண்டன், சுமை தூக்கும் தொழிலாளியைக் கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

புகாரின்பேரில் கோட்டை காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT