திருச்சி

மணப்பாறையில் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட 2-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறையில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு, கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆா்.ராமாயி, கே.கருப்பையா, எம்.தங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். மின்வாரிய தொழிற்சங்க மாநில பொருளாளா் பி.ராஜேந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்கவுரையாற்றினாா்.

மாநாட்டின் பாா்வையாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ரெங்கசாமியும், சிறப்பு அழைப்பாளராக மாநிலச்செயலாளா் பழ.ஆசைத்தம்பியும் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

மாநாட்டில் 21 போ் கொண்ட மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது. நன்றியுரை நகரச்செயலாளா் பி.பாலு கூறினாா். மாநாட்டில், பால்பண்ணை - துவாக்குடி அணுகு சாலையை உடனடியாக செயல்படுத்தவும், கல்வியை காவிமயமாக்கும் புதிய கல்விக்கொள்கை 2020 திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

SCROLL FOR NEXT