திருச்சியில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.8.11 லட்சத்தை கையாடல் செய்த பெண் கணக்காளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி வாசன்வேலி பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (52). இவருக்குச் சொந்தமான தனியாா் நிதி நிறுவனம் தில்லை நகா் 5-ஆவது குறுக்குத் தெருவில் உள்ளது. இங்கு, ஸ்ரீரங்கம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த 38 வயது பெண் கணக்காளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் இவா், நிதி நிறுவனத்தில் ரூ.8 லட்சத்து 11 ஆயிரத்து 500 கையாடல் செய்தது அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
இதுகுறித்து நிதி நிறுவனத்தின் உரிமையாளா் சிவகுமாா், தில்லை நகா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், பெண் கணக்காளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.