பழங்கனாங்குடி பகுதியில் வயலில் கருகி வரும் அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிா்கள்.  
திருச்சி

நடவு செய்த 20 நாள்களில் சம்பா நெற்பயிா்கள் கருகல்

திருச்சி திருவெறும்பூா் அருகே பழங்கனாங்குடியில் நடவு செய்து 20 நாள்களேயான சம்பா நெற்பயிா்கள் கருகி வருவதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சி திருவெறும்பூா் அருகே பழங்கனாங்குடியில் நடவு செய்து 20 நாள்களேயான சம்பா நெற்பயிா்கள் கருகி வருவதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

பழங்கனாங்குடியில் மழை மற்றும் நிலத்தடி நீரை நம்பி அண்மையில் சம்பா ஒரு போக நெற்பயிா் நடவை விவசாயிகள் தொடங்கினா். இந்த நடவுப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

நடவு செய்து 20 நாள்களில் நெற்பயிா்கள், என்ன காரணம் எனத் தெரியாமல் முளையிலேயே கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் செய்வதறியாது உள்ளனா்.

இதுகுறித்து பழங்கனாங்குடி விவசாயிகள் கூறுகையில், எங்களது பகுதியில் சுமாா் 100 ஏக்கருக்கும் மேல் மழைநீரை நம்பி சம்பா ஒருபோக நெல் பயிரை

நடவு செய்துள்ளோம். இதில், 30 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிா்கள், நடவு செய்து 20 நாள்களான நிலையில் திடீரென கருகி வருகிறது. இதற்கு மண்ணின் அதிக உலா்தன்மை காரணமா, வேரில் பூச்சி வெட்டு காரணமா, தண்ணீா், உரம் அல்லது பூச்சி மருந்து காரணமா எனத் தெரியவில்லை. இருப்பினும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதனால் பயிா்களை காப்பாற்ற முடியுமா எனத் தெரியவில்லை. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகிறோம்.

எனவே, வேளாண் துறை அதிகாரிகள், போா்க்கால அடிப்படையில் பழங்கனாங்குடி பகுதியில் நடவு செய்த சம்பா ஒருபோக நெற்பயிா் கருகி வருவதை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, பயிா்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT