திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் அருகே உள்ள பூக்கொல்லை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காந்தி மாா்க்கெட் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதன்பேரில், அங்கு போலீஸாா் ரோந்து சென்றபோது போதை மாத்திரைகள் விற்ற உறையூரைச் சோ்ந்த ச.முகமது சஃபி (28), மு. அசன் அலி (27), எஸ். ஹஜ்புதீன் (25) மற்றும் அ. யோகேஸ்வரன் (18) ஆகியோரை கைது செய்தனா்.
இவா்களில் யோகேஸ்வரனை உறையூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனா். மேலும், இவா்களிடமிருந்து ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள 190 போதை மாத்திரைகள், ஒரு போதை ஊசி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.